முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர் அல்ல
என்று கூறிய :
நஜ்மா ஹெப்துல்லாவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
முஸ்லிம்களும்,
கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் அல்ல என்று கூறிய
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது
என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையில்
வியாழக்கிழமை தொடங்கிய மார்க்சிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.
ராமகிருஷ்ணன் இது தொடர்பாக ஊடகங்களுக்கு
வெளியிட்டுள்ளஅறிக்கை:
மத்திய
சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராகப்
பொறுப்பேற்றுள்ள நஜ்மா ஹெப்துல்லா,இந்தியாவில்
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் அல்ல என்று கருத்து
தெரிவித்துள்ளார்.
இது,
தற்போது அமலில் இருக்கும் இடஒதுக்கீடு
நடைமுறையினை சிதைக்கும் தன்மை கொண்டது. முஸ்லிம்களுக்கு
கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீத உள் இட
ஒதுக்கீடு என்று தமிழக அரசு
முடிவெடுத்தது மதத்தின் அடிப்படையில் அல்ல. பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள்
பின்தங்கிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களை மேம்படுத்தவே உள்
இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
சச்சார்
குழு பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க
வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து
வரும் நிலையில் அமைச்சரின் இந்த கருத்து, சமூக
நீதி குறித்த அரசின் அணுகுமுறையை
கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இது சமூகத்தில் சிறுபான்மையினருக்கு பாதகமான நிலையை உருவாக்கும்.
சிறுபான்மையினர்
நலன்களைப் பாதிக்கும் எந்த முடிவையும் மத்திய
அரசு எடுக்கக் கூடாது. இந்த விஷயத்தில்
நாட்டு மக்கள் விழிப்புடன் செயலாற்ற
வேண்டும்.
பதவியேற்ற
இரண்டு நாள்களில் தங்களது வகுப்புவாத திட்டங்களை
நிறைவேற்றும் நடவடிக்கைகளை பாஜக அரசு தொடங்கியுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்
370-வது சட்டப் பிரிவை நீக்குவது
தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக பிரதமர்
அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர
சிங் தெரிவித்துள்ளார்.
370-வது சட்டப்
பிரிவின்படிதான காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இந்தப் பிரிவை நீக்குவது தேச
நலனுக்கோ, ஒருமைப்பாட்டுக்கோ பலனளிக்காது
இத்தகைய
செயல்கள், பாஜக அரசு வகுப்புவாத
அடிப்படையில் தான் செயல்படவுள்ளது என்பதையே
காட்டுகிறது. இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு,
இத்தகைய வகுப்புவாத திட்டங்களை கைவிட்டு, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் இவ்வாறு
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment