பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடிக்கு,
தமிழ் தேசிய கூட்டமைப்பு
வாழ்த்து
சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை விரைவாக வழங்குமாறும் வேண்டுகோள்
நரேந்திர
மோடிக்கு தமிழ்
தேசிய கூட்டமைப்பு
வாழ்த்து தெரிவித்து
உள்ளது.பிரதமராக
பதவி ஏற்க
உள்ள நரேந்திர
மோடிக்கு தமிழ்
தேசிய கூட்டமைப்பு
தலைவர் இரா.சம்பந்தன் கடிதம்
ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார்.
கடிதத்தில்
சம்மந்தன் கூறியிருப்பதாவது:–
பாராளுமன்ற
தேர்தல் வெற்றிக்காகவும்,
பிரதமர் பொறுப்பை
நீங்கள் ஏற்றுக்கொள்வதற்காகவும்
எங்களது மனமார்ந்த
வாழ்த்துகள். உங்களது அரசோடு நெருக்கமாக பணியாற்ற
நாங்கள் காத்திருக்கின்றோம்.
இலங்கை
அரசின் முறையற்ற
செயற்பாடுகள், நல்லிணக்க முயற்சிகளையும் நிரந்தர அமைதி
ஏற்படும் சூழலையும்
மேலும் பலவீனப்படுத்துவன
மட்டுமன்றி எதிர்ப்புணர்வுகளையே உருவெடுத்து
வளரச் செய்யும்.
இத்தகைய ஒரு
நிலைமையைத் தமிழ் மக்கள் நிச்சயமாக விரும்பவில்லை.இலங்கை அரசின்
இத்தகைய நடவடிக்கைகள்,
ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல்
தீர்வை உருவாக்கி
எடுப்பதில் அது விசுவாசமாக இல்லை என்பதையே
தெளிவாக காட்டுகின்றன
என்பதையும் நாங்கள் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட
விரும்புகின்றோம்.
இந்த
விஷயங்களை முடிந்தளவு
விரைவாக உங்களது
கவனத்திற்கு கொண்டுவருவது எங்களது கடமைப்பாடு என்று
நாங்கள் கருதுகின்றோம்.
நாங்கள் அப்படி
கருதுவது ஏனென்றால்
நீதியினதும் சமத்துவத்தினதும் அடிப்படையிலான
கெளரவமான ஒரு
சமாதானம் எங்கள்
நாட்டில் உருவாகும்
என்றும், பாரத
தேசம் வகிக்கின்ற
பாத்திரம் அதனை
உறுதிப்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகின்றமையால் ஆகும்.உங்களையும் உங்கள் அரசில்
அங்கம் வகிக்கும்
ஏனையவர்களையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை உங்களால்
முடிந்த அளவுக்கு
விரைவாக எமக்கு
வழங்குமாறும் நாம் வேண்டுகின்றோம்.இவ்வாறு அவர்
அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment