சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு
முன்னேறியது பஞ்சாப்
குவாலிபையர்
2-வில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ்லெவன்
பஞ்சாப் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு
முன்னேறியது. முன்னதாக டாஸ் வென்ற சென்னை
அணி முதலில் பந்து வீச்சை
தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய
பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்
6 விக்கெட்டுகளை
இழந்து 226 ஓட்டங்கள் குவித்தது. பஞ்சாப் அணியின் தொடக்க
ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் அதிரடியாக விளையாடி
சதம் அடித்து அசத்தினார். சேவாக்
58 பந்துகளில் 12 பவுண்டரி, 8 சிக்சர், உள்பட 122 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த
தொடரில் தனிநபரின் அதிபட்ச ஸ்கோர் இதுவாகும்.
மேலும் பஞ்சாப் அணியில் டேவிட்
மில்லர் 38, வோரா 34 ஓட்டங்கள் எடுத்தனர்.
இதனை அடுத்து 226 ஓட்டங்கள் எடுத்து வெற்றி என்ற
கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 24 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சென்னை அணியில் சுரேஷ்
ரெய்னா 25 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்சர் உள்பட 87 ஓட்டங்கள்
எடுத்து துரதிஷ்ட வசமாக ரன் அவுட்
ஆனார்.
இந்த
தொடரில் சென்னையுடன் மோதிய 3 ஆட்டங்களிலும் பஞ்சாப்
அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணியின் இந்த வெற்றியின்
மூலம் வரும் ஞாயிற்றுகிழமை
கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் பெங்களூருவில்
இறுதிபோட்டி விளையாட உள்ளது.
0 comments:
Post a Comment