காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்

கர்ப்பிணி பெண் கல்லால் அடித்து கொலை பாகிஸ்தானில் சம்பவம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் காதல் திருமணம் செய்து கர்ப்பிணியான பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையை உடனே எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். லாகூருக்கு அருகே உள்ள பைசலாபாத்தை சேர்ந்தவர் பர்சானா பர்வீன். இவர் 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி, ஜாரன்வாலாவை சேர்ந்த முகமது இக்பால் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தனது மகளை முகமது இக்பால் ஏமாற்றி கடத்தி சென்று வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டதாக பர்சானாவின் பெற்றோர் பொலிஸில் புகார் செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை லாகூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு 2 தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனது கணவருடன் சாட்சியம் அளிக்க உயர் நீதிமன்றத்துக்கு பர்சானா வந்தார். அங்கு பர்சானாவின் தந்தை மற்றும் சகோதரர்கள் உட்பட 20 பேர் அவர்களை திடீரென சூழ்ந்து, பர்சானாவை வலுகட்டாயமாக அழைத்து செல்ல முயற்சித்தனர்.
அவர்களது முயற்சி தோற்று போகவே, உயர் நீதிமன்றத்துக்கு வெளியிலேயே பர்சானாவையும் முகமது இக்பாலையும் அந்த கும்பல் கல்லால் அடித்தனர். கட்டைகளால் கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால் பொலிஸார் அதிர்ச்சி அடைந்து அந்த கும்பலை தடுக்க முயற்சித்தனர். அப்போது அடி தாங்காமல் முகமது இக்பால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால், அவரது மனைவி பர்சானா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிஸார், பர்சானாவின் தந்தையை கைது செய்தனர். தப்பியோடிய சகோதரர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். பாகிஸ்தானில் இதுபோன்ற குடும்ப கெளரவ கொலைகளுக்கு இதுவரை 900 இளம்பெண்கள் பலியாகி உள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது. ஆனால், குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.

இது பற்றி விரிவாக விசாரணை நடத்தி, கெளரவ கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். இளம்பெண்ணை கெளரவ கொலை செய்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அந்த சம்பவம் பற்றி உடனே விசாரித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறும் பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப்புக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த கொடூரமான குற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டப்படி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்Ó என்று நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top