ராகுல் காந்தியை 'கோமாளி' என்று கூறிய கருத்தில்
எந்த மாற்றமும் இல்லை டி.எச்.முஸ்தபா
ராகுல்
காந்தியை பற்றி
ஏற்கனவே தான்
கூறிய கருத்தில்
எந்த வித
மாற்றமும் இல்லை
என்று காங்கிரசில்
இருந்து தற்காலிக
நீக்கம் செய்யப்பட்ட
டி.எச்.முஸ்தபா கூறியுள்ளார்.
பாராளுமன்ற
தேர்தலில் தோல்வி
குறித்து விவாதிப்பதற்காக
காங்கிரஸ் கட்சியின்
நிர்வாக குழு
கூட்டம் திருவனந்தபுரத்தில்
உள்ள கேரள
காங்கிரஸ் தலைமையகமான
இந்திர பவனில்
நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் சார்பில் பல்வேறு
கருத்துகள் கூறப்பட்டது. ஒட்டுமொத்த தோல்விக்கு மத்திய
அரசின் மக்கள்
விரோத ஆட்சியும்,
ஊழல் பிரச்சினைகளும்,
விலைவாசி உயர்வும்தான்
காரணம் என
கூறப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் தோல்வி
குறித்து மூத்த
உறுப்பினர் டி.எச்.முஸ்தபா சில
தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களுக்கு
அளித்த பேட்டியில்,
ராகுல்காந்தி கோமாளி என்று கூறி இருந்தார்.
முஸ்தபாவின்
இந்த பேச்சு
குறித்து நிர்வாக
குழு கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டது. கட்சியின் கட்டுப்பாட்டை
மீறி ராகுல்
காந்தியை அவதூறாக
பேசிய முஸ்தபாவை
தற்காலிக நீக்கம்
செய்ய அந்த
கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இடைநீக்கம்
செய்யப்பட்டது குறித்து டி.எச்.முஸ்தபா
நிருபர்களிடம் கூறியிருப்பதாவது;-
ஏற்கனவே
நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து
சரியான முடிவை
எடுக்காமல் வேட்பாளர்களை நிறுத்தியதால்தான்
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஏகாதிபத்திய
சிந்தனைக்கு காங்கிரஸில் இடமில்லை. பாரதீய
ஜனதா கட்சி
சார்பில் பல
மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு
வாக்குச்சாவடிகள் வாரியாக உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள்
நடைபெற்று வந்தது.
இந்த
நிலையில், காங்கிரஸில்
எந்த ஒரு
பணியும் நடைபெறவில்லை.
மூத்த உறுப்பினர்
என்ற முறையில்
கருத்துகளை சொல்ல வாய்ப்பு அளிக்கப்படவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கியதன்
மூலம் காங்கிரஸ்
கட்சிக்கு எதிர்காலம்
இருக்குமேயானால் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்
காந்தி குறித்து
நான் கூறிய
கருத்தில் மாற்றமில்லை.இவ்வாறு அவர்
கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment