நாளை மோடி பதவியேற்பு விழா :
உச்சகட்ட பாதுகாப்பு
வளையத்திற்குள் டில்லி
குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மேல் விமானங்கள் பறக்கவும் தடை
டில்லியில்
நாளை நடைபெற
உள்ள நரேந்திர
மோடியின் பிரமாண்ட
பதவியேற்பு விழாயொட்டி அங்கு உச்சகட்ட பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவர்
மாளிகையின் திறந்தவெளி முற்றத்தில் 3000
பேர் அமர்ந்து
பதவியேற்பு நிகழ்வை காணும் வகையில் ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளனஎன அறிவிக்கப்படுகின்றது.
ஒரே நேரத்தில்
முக்கிய பிரமுகர்கள்
கூட இருப்பதால்
தலைநகர் டில்லி
பலத்த பாதுகாப்பு
வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
25,000 பொலிஸார், துணை இராணுவப் படையினர் பாதுகாப்பு
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
என இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
குடியரசுதின
விழா அணிவகுப்பின்
போது வழங்கப்படுகிற
பாதுகாப்பை போன்றதொரு பாதுகாப்பு இவ்விழாவிற்கும் வழங்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மேலே விமானங்கள்
பறக்கவும் தடை
விதிக்கப்பட்டுள்ளது. விமான எதிர்ப்பு
துப்பாக்கிகளும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுத் தலைவர்களை விமான நிலையங்களில்
வரவேற்க சிறப்புக்குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே
மோடியுடன் நாளை
சிறிய அளவிலான
அமைச்சரவை மட்டுமே
பதவியேற்கும் என்று தெரிகிறது. கூட்டணி கட்சிகளை
சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம்
அளிக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் அமைச்சரவையை சில
மாதங்களுக்குப் பிறகு விரிவாக்கம் செய்து கொள்ளலாம்
என்று மோடி
கருதுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment