கல்முனை ஸாஹிறா
பழைய மாணவர்கள் சங்க கொழும்புக் கிளையின்
வருடாந்தபொதுக்கூட்டம்
கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கொழும்பு – 7ல் அமைந்துள்ள தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கொழும்பு – 7ல் அமைந்துள்ள தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பழைய மாணவர்கள் சங்க கொழும்புக் கிளையின் தலைவர் டாக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி பிரதியமைச்சர் மொஹான் லால் பிரதம அதிதியாகவும், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் முன்னாள் அதிபர்களான எஸ்.எச்.எம்.ஜெமீல். கே.எல்.அபூபக்கர்லெவ்வை, ஆதம்பாவா,டாக்டர் பரீத், ஓய்வு பெற்ற கவிப்பணிப்பாளர் மருதூர் ஏமஜீத், அதிபர் எ.ஆர்.எம்.ஜிப்ரி உள்ளிட்ட கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் கல்வி பயின்று இன்று இலங்கையின் நாலாபாகங்களிலும் பிரகாசிக்கும் பொறியியலாளர்கள், வைத்தியர்கள், உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
படங்கள்: அஷ்ரப் ஏ.சமத்
pix by Ashraff.A.Samad

Kalmunai Zahira College Colombo Branch A.G.M
0 comments:
Post a Comment