ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின்  அழைப்பை ஏற்றார் மோடி

ஜூலைக்கு பிறகு இலங்கை விஜயம்

இலங்கை வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ளார். ஜூலை மாதத்திற்கு பிறகு இலங்கைக்கு மோடி பயணம் செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸவிடம் புதிதாகப் பதவியேற்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர  மோடி தெரிவித்துள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
இந்திய மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்க டில்லி  சென்ற ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸ, பிரதமர் மோடியை ஐதராபாத் இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது இலங்கை -  இந்திய  மீனவர்கள் பிரச்சனை, தமிழக விவகாரம் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர் எனக் கூறப்படுகின்றது.

இலங்கையில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு, மீள் குடியேற்றம், மறு கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்களை மோடியிடம்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விளக்கினார். முந்தைய அரசின் திட்டங்களை தற்போதையை அரசிலும் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இலங்கை தமிழர் நலனில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக மோடி அப்போது தெரிவித்தார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MAKKAL VIRUPPAM     MAKKAL  VIRUPPAM

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top