விஸ்வ இந்து பரிஷத் தலைவர் கருத்தால் சர்ச்சை :
வலுவான ஆட்சி அமைந்துள்ளதால்
ராமர் கோயில் கட்டுவது உறுதி...
மத்தியில்
வலுவான ஆட்சி
அமைந்துள்ளதால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது
உறுதி என
விஸ்வ இந்து
பரிஷத் தலைவர்
அசோக் சிங்கால்
கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்துத்துவாவை
வலுப்படுத்தும் வகையில் நரேந்திர மோடி அரசு
பல்வேறு நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும்
என்றும் அவர்
வலியுறுத்தியுள்ளார். ராமர் கோயில்
கட்டுவது குறித்த
கேள்விக்கு பதிலளித்த அசோக் சிங்கால், மத்தியில்
வலுவான ஆட்சி
அமைந்திருப்பதால் ராமர் கோயிலும் வலுவாக கட்டப்படும்
என்றார். கல்வி
முறையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும்
என அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது
சிவில் சட்டத்தை
நடைமுறைபடுத்த வேண்டும், கங்கை நதியை புனிதப்படுத்த
வேண்டும் என்பது
உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளையும் அசோக் சிங்கால் வலியுறுத்தியுள்ளார். மோடி தலைமையிலான அரசு நாளை
பதவியேற்க உள்ள
நிலையில் இந்துத்துவா
கோரிக்கைகளை விஸ்வ இந்து பரிஷத் முன்வைத்திருப்பது
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
.
0 comments:
Post a Comment