கிழக்கு முதலமைச்சர் பதவியை
முஸ்லிம் காங்கிரஸுக்கு
வழங்க வேண்டும்.
"முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கவிருக்கும் கிழக்கு மாகாண
முதலமைச்சர்
பதவி எப்படியும் அம்பாறை மாவட்டத்திற்கே
வழங்கப்படல் வேண்டும்."
மாகாண சபை உறுப்பினர்
ஏ.எம்.ஜெமீல
கிழக்கு
மாகாண முதலமைச்சர் பதவி ஆட்சியின் அரைவாசி காலப் பகுதியில் எப்படியும் முஸ்லிம்
காங்கிரஸுக்கு வழங்கியேயாக வேண்டும். அரசாங்கத்துடன் இது குறித்து எழுத்துமூல ஒப்பந்தம்
செய்யாவிட்டாலும் கல்முனை மேயர் விடயம் போன்று வாய்மூல ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இவ்வாறு
கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும், முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர்
அணியின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
கிழக்கு
மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கவிருக்கும்
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி எப்படியும் அம்பாறை மாவட்டத்திற்கே வழங்கப்படல் வேண்டும்.
முதலமைச்சர்
யார் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கும். இப்பதவியை யாருக்கு வழங்குவது என்பது
தொடர்பாக கட்சி அந்த நேரத்தில் கூடி சகலவற்றையும் ஆராய்ந்து சரியான முடிவை எடுக்கும்.
கட்சி அப்பதவியை அம்பாறை மாவட்டத்திலுள்ள யாருக்கும் வழங்கலாம்.
முதலமைச்சர்
புதிதாக நியமிக்கப்படும்போது மாகாண அமைச்சர்கள் இராஜினாமாச் செய்யவேண்டிய அவசியமில்லை.
புதிய முதலமைச்சருடன் அமைச்சரவையும் மாற்றமடையும். அந்த நேரத்தில் கட்சி சரியான முடிவை
எடுக்கும்.
எமது
முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பொருட்டு மிக மதி நுட்பத்துடன் அரசியல்
தந்ரோபாயங்களை வகுத்து முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்தையும் தனித்துவத்தையும் பேணிப்
பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவர் என்ற அடிப்படையிலும்
கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய வாக்குகளைத் தக்க வைத்துள்ள கல்முனைத் தொகுதி மக்களைப்
பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற அடிப்படையிலும் மிக அவதானமாகக் கட்சிக் கட்டுப்பாட்டுடன்
கூறிக் கொள்ளவிரும்புகின்றேன் என மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தெரிவித்தார்.
நன்றி: நவமணி 2013.11.17
0 comments:
Post a Comment