இந்திய மத்திய அமைச்சர்
ஸ்மிருதி ராணிக்கு நெருக்கடி :
உடனடியாக பதவி விலக
காங்கிரஸ் வலியுறுத்தல்
உண்மையான
கல்வித் தகுதியை
மறைத்து தேர்தலில்
போட்டியிட்டதாக எழுந்துள்ள புகாரால் இந்திய மத்திய அமைச்சர் ஸ்மிருதி
ராணி உடனடியாக
பதவி விலக
வேண்டும் என்று
காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
டில்லியில்
செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின்
செய்தி தொடர்பாளர்
மீம் அப்சல்,
மத்திய அமைச்சரே
கல்வித் தகுதியை
மறைத்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை
எனத் தெரிவித்துள்ளார். ஸ்மிருதி மத்திய
அமைச்சர் பதவியில்
நீடிக்க கூடாது
என்றும் அவர்
வலியுறுத்தியுள்ளார். மேலும் பேசிய
அவர் கடந்த
2004ம் ஆண்டு
ஸ்மிருதி தாக்கல்
செய்த பிரமாணப்
பத்திரத்தில் பி.ஏ படித்ததாக கூறியுள்ளார்.
அண்மையில் பி.காம் முதலாம்
ஆண்டு படித்ததாக
கூறுகிறார். இதில் எந்த பிரமாணப் பத்திரம்
சரியானது என்பதை
தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை,
தம்மை மத்திய அமைச்சர் பதவியில்
செயல்படவிடாமல் தடுக்க முயற்சி நடப்பதாக ஸ்மிருதி
ராணி குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட்ட
போது மாறுபட்ட
கல்வித் தகுதியை
குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க
மறுத்த அவர்,
செயல்பாடுகளின் அடிப்படையில் தம்மை மதிப்பிட வேண்டும்
என்று கேட்டுக்
கொண்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment