நேபாள நாட்டில்
நிலச்சரிவு
159-க்கும்
மேற்பட்டோர் பலி
நேபாள
நாட்டில் ஏற்பட்ட
நிலச்சரிவில் 159 க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள்
தெரிவிக்கின்றன. நேபாள நாட்டில் சிந்துபல்சோக் மாவட்டத்தில்
பெய்து வரும்
கன மழையினால்
அங்குள்ள சன்கோஷி
நதியில் வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால்
ஏற்பட்ட நிலச்சரிவுகளில்
சிக்கி 8 பேர்
உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள நாட்டின்
மலைக்கிராமங்களைச் சேர்ந்த 159 க்கும்
மேற்பட்டோர் நிலச்சரிவுகளில் சிக்கியிருப்பதால்
அவர்களை மீட்பதற்காக
அந்நாட்டு இராணுவம்
மற்றும், மீட்புக்குழுவினர்
நிலச்சரிவினால் பாதிக்கபட்ட இடத்திற்க்கு விரைந்துள்ளனர். தற்போது
மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.159
பேரை மீட்பதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவு
ஏற்பட்ட இடம்
மலைசூழ்ந்த பிரதேசம் என்பதால் வான் வழியாக
ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று
வருகின்றன.
நிலச்சரிவால்
சன்கோஷி ஆற்றின்
நீரோட்டம் தடைபட்டுள்ளதால்
மலைகளுக்கு நடுவே இரண்டரை கிலோமீட்டர் நீளத்திற்கு
ஏரி போன்ற
அமைப்பு உருவாகியுள்ளது.
இதில், எந்த
நேரத்திலும் உடைப்பு ஏற்படலாம் என்பதால், பாதுகாப்பான
இடங்களுக்குச் செல்லுமாறு கரையோரங்களிலுள்ள
மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கரையோரங்களில் வசிக்கும்
மக்கள் பாதுகாப்பாக
வேறு இடங்களுக்கு
செல்ல உத்தரவு
பிறக்கபட்டுள்ளது.
நேபாள எல்லையையொட்டியுள்ள பீகார் மாநிலத்தின் கோசி ஆற்றிலும்
வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால், தாழ்வான பகுதி
மக்களை அங்கிருந்து
வெளியேற்றும் நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுவருகிறது
எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment