சீனாவில் நிலநடுக்கம்
பலி எண்ணிக்கை 381ஆக உயர்வு

சீனாவின் யுனான் மாகாணத்தில் நேற்று மாலை 4.30 மணியளிவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 381 ஆக  தற்போது உயர்ந்துள்ளது. 2,000 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தொலை தொடர்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில், மீட்புப்பணைகளை இராணுவத்தினர்  மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின், இந்திய மற்றும் நேபாள எல்லையையொட்டிய அருணாசல பிரதேச மாநிலம் அருகே உள்ள, ஷிகேட்ஸ் பகுதியிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

அங்குள்ள ஊடகமான சி.சி.டி.வி. கடந்த 14 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக்பெரிய நிலநடுக்கம் இது என தெரிவித்துள்ளது


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top