பாக்தாத்தில்
தொடர் கார் குண்டு வெடிப்பு
51 பேர் பலி
பாக்தாத்தில்
ஷியா பிரிவு
முஸ்லிம் மக்கள்
அதிகம் வசிக்கும்
பகுதியில் அமைந்துள்ள
மக்கள் நெருக்கடி
நிறைந்த சந்தையில்
அடுத்தடுத்து கார் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில்
51 பேர் பலியாகியுள்ளனர்.
சத்ர
நகரின் கடை
வீதியில் இரண்டு
கார் குண்டு
வெடிப்புகள் ஒரு சேர நிகழ்த்தப்பட்டுள்ளது. அதில் 31 பேர் பலியாகினர். 34 பேர்
காயமடைந்தனர். அடுத்து இரவு நேரத்தில் உர்
அருகே மற்றொரு
கார் குண்டு
தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 11 பேர்
உயிரிழந்தனர்.
இதையடுத்து,
தென்கிழக்கு நகரில் நடத்தப்பட்ட இரண்டு கார்
குண்டு தாக்குதல்களில்
9 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டில்
சன்னி பிரிவைச்
சேர்ந்த முஸ்லிம்களால்
உருவாக்கப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் அமைப்பு மோசூல்
உள்ளிட்ட பல்வேறு
இடங்களைக் கைப்பற்றியுள்ளதால்,
தலைநகர் பாக்தாத்தில்
ஷியா பிரிவு
முஸ்லிம்களை குறிவைத்து இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு
வருகின்றன.
0 comments:
Post a Comment