முதுகெலும்பில்லா
முஸ்லிம் அரசியல் தலைமைகளால் ஏது பயன்?
-
எம். பௌஸர்
ஆளும்
அரசாங்கம் முழு
மொத்த சமூகத்தினையும்
ஒடுக்குகின்ற போது... எந்த கூச்சமும் இன்றி
ஆளும் ஒடுக்குமுறை
அரசுக்கு தமது
ஆதரவினை வழங்கும்
முஸ்லிம் அரசியல்
தலைமைகளின் கையாலாகாததனம் குறித்த விமர்சனங்கள் இலங்கை
முஸ்லிம் அரசியல்
சூழலில் முன்வைக்கப்பட்டுவரும்
காலமிது.
இந்த
முஸ்லிம் அரசியல்
தலைமைகள் தாங்கள்
அரசாங்கத்திற்கு வழங்கும் முன், பின்னான அரசியல்
ஆதரவையும், ஒருவகையில் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்கு
தாமே துணை
நிற்கும் அரசியல்
பங்களிப்பினையும் மக்களிடம் மறைக்க, முஸ்லிம் மக்களை
அரசியல் இருட்டில்
வைக்க சொல்லும்
பிரதான காரணம்
"தாங்கள் அரசுக்கு வழங்கும் ஆதரவினை விலக்கிக்
கொள்வதால் எந்த
நன்மையும் இல்லை
"என்பதுதான்.
இவர்களிடம்
முஸ்லிம்கள் கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம்
இருக்கிறது.... அரசியல் வறுமையும் , முறையான சிவில்
சமூக அறிவூட்டலும்
இன்னும் மக்கள்
மயப்படுத்தப்படாத சூழல் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில்
இருந்து வருகிறது.அதுவரை மேடைப்
பேச்சுக்களும் ஊடக அறிக்கைகளும் போதும் அடுத்த
தேர்தலிலும் மக்களை ஏய்த்து அரசியல் அதிகாரத்தினப்
பெற.......
முஸ்லிம்
அரசியல் தலைமைகளுக்கு
தெரியுமா? அரசியலில்
அடையாள எதிர்ப்பு...
மக்கள் உணர்வினை,
அபிப்பிராயங்களை , கண்டனத்தினை பிரதிபலித்தல்,
தெரியப்படுத்துதல் . ஒடுக்குமுறையாளர்களுக்கு பலமான அரசியல்
செய்தியினை எத்திவைத்தல் என்பதில் உள்ள அரசியல்
பாத்திரம், வகிபாகம் என்ன என்பது?
பலஸ்தீன
விவகாரத்தில் பிரித்தானிய அரசு வகிக்கின்ற கொள்கை
தொடர்பில் பிரித்தானிய
முஸ்லிம்களினது மட்டுமல்ல, மனித உரிமைக்கும் பலஸ்தீன
மக்களின் வாழ்வுரிமையை
வலியுறுத்துகின்ற பிரித்தனிய வாழ் அனைத்து மக்களினதும்
குரலை பிரதிபலிக்கும்
அரசியல் எதிர்ப்பினை
கன்சர்வேட்டிவ் கட்சி அமைச்சர் தனது பதிவியை
இராஜினாமா செய்து
வெளிப்படுத்தி உள்ளார்.
பிரித்தானிய
அரசு ,இஸ்ரேல்
ஆதரவு நிலைப்பாட்டில்
பகிரங்கமாக அம்பலப்படும் தருணமாகவும், அரசுக்கு நெருக்கடியாகவும்
இந்த அரசியல்
எதிர்ப்புணர்வு மாறிவிட்டுள்ளது.
நண்பர்களே..
இலங்கை முஸ்லிம்
அரசியல் தலைமைகளுக்கு...
அடையாள எதிர்ப்பு...
மக்கள் உணர்வினை,
அபிப்பிராயங்களை , கண்டனத்தினை பிரதிபலித்தல்,
தெரியப்படுத்துதல் . ஒடுக்குமுறையாளர்களுக்கு பலமான அரசியல்
செய்தியினை எத்திவைத்தல் என்பது தொடர்பில் தெரியுமா?
தெரியாதா? அல்லது
தெரிந்து கொண்டும்
இன்னும் மக்களை
ஏய்க்கிறர்ர்களா?
அரசியல்
கற்கை/ பாடம்
என்பது ஒரு
கட்சிக்கு வாக்குப்
போடுவதும், அக்கட்சியின் தலைமைகளை தோளில் சுமப்பதுமல்ல...
உண்மையான அரசியல்
தெளிவு/ பார்வை
என்பது மக்களின்
நலனில் இருந்து
கட்சி தலைமைகளை
திசை திரும்பாமல்
பார்த்துக் கொள்வதாகும். திசைமாறும் தருணங்களில் அழுத்தங்களையும்
விமர்சனகளையும் வைத்து சரியான வழிக்கு தலைமையை
கொண்டு செலுத்துவதே.....
0 comments:
Post a Comment