ஐநா பாடசாலை
மீது இஸ்ரேல் தாக்குதல்
மற்றொரு அத்துமீறிய
செயல்.
இதுபோன்ற பைத்தியக்கார தனம் கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்படல்
வேண்டும்
-
பான் கீ முன் செய்தி தொடர்பாளர்
ஐக்கியநாடுகளின்
முகாம்கள் பாதுகாப்பு பகுதிகள் அது எதிர்த்து போராடும் பகுதிகள் அல்ல. இந்த தாக்குதல்
மற்றொரு அத்துமீறிய தாக்குதல். இதுபோன்ற பைத்தியக்கார தனம் கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட
வேண்டும் என பான் கீ முன் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்
- காஸாமுனை இடையே கடந்த மாதம் 8 ஆம்
திகதி தொடங்கிய
சண்டை உக்கிரம்
அடைந்து வருகிறது.
2 தினங்களுக்கு முன் 3 நாள் போர் நிறுத்தம்
அறிவிக்கப்பட்டும், அது பலன்
அளிக்கவில்லை. இரு தரப்பினரும் அதை மீறி
தாக்குதலை தொடர்ந்தனர்.
இந்த சண்டையில்
அப்பாவி பாலஸ்தீன
மக்கள் பலியாவது
தொடர்கதை ஆகி
வருவது சர்வதேச
சமுகத்தை உலுக்கி
உள்ளது.
இந்த
நிலையில், காஸாமுனையின்
தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ரபா
நகரில் ஐ.நா. சபை
நடத்தி வருகிற
பாடசாலையின்மீது இஸ்ரேல் நேற்று குண்டு வீச்சு
நடத்தியது. இந்த தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக
உயிரிழந்தனர்.இங்குதான் போரினால் இடம் பெயர்ந்த
மக்களுக்கு ஐ.நா. அடைக்கலம் கொடுத்து
வந்தது. இந்த
தாக்குதல் உலக
நாடுகளை அதிர்ச்சியில்
ஆழ்த்தி உள்ளது.
இந்த
நிலையில், ஐநா
பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கியநாடுகள் தலைவர்
பான்கீ மூன்
கடும் கண்டனம்
தெரிவித்துளார். இது தொடர்பாக பான் கீ முன்
செய்தி தொடர்பாளர்
வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு பழிவாங்கும் குற்றசெயல். ஐக்கியநாடுகளின் முகாம்கள் பாதுகாப்பு பகுதிகள் அது எதிர்த்து போராடும் பகுதிகள் அல்ல. இந்த தாக்குதல் மற்றொரு அத்துமீறிய தாக்குதல். இதுபோன்ற பைத்தியக்கார தனம் கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,இஸ்ரேல் நேற்று
நடத்திய தாக்குதல்களில்
மொத்தம் 30 பாலஸ்தீனர்கள் பலியாயினர். இதன்மூலம் 27 நாள்
போரில் கொல்லப்பட்ட
பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,820 ஆக உயர்ந்தது. இவர்களில்
398 பேர் ஏதுமறியாத
குழந்தைகள், 209 பேர் பெண்கள், 74 பேர் மூத்த
குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment