மலேசியக் கவிஞர் சீனி நைனா முஹம்மது வஃபாத்து
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
தனிச்
சிறந்த தமிழறிஞரும்
2011-இல் அனத்துலக
இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டை டத்தோ ஹாஜி
இக்பால்,மர்ஹூம்
புலவர் ப.மு.அன்வர்
ஆகிய பெருமக்களுடன்
இணைந்து மிகவும்
வெற்றிகரமாக நடத்தியவரும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும்
மலேசியாவின் மாண்பார்ந்த தமிழ்க்குடிமகனும்
ஆன மூத்த
கவிஞர் சீனி
நைனாமுகம்மது அவர்கள் இன்று மலேசிய நேரப்படி
மதிய உணவு
நேரத்தில் பினாங்கில்
மாரடைப்பால் காலமானார்.
தொல்காப்பியப்
பேரறிஞரும் மகத்தான மரபுக் கவிஞரும் ஆன
சகோதரர் சீனிநைனாமுகம்மது
அவர்களின் மறைவு
உண்மையிலேயே மொழிக்கும் சமுதாயத்திற்கும்
பலவகையிலும் பேரிழப்பாகும்.
அவருடைய
பிழைபொறுத்து அருளாளனான அல்லாஹ் அவருக்கு எல்லா
மறுமைப் பேறுகளையும்
வழங்க அனைவரும்
இறைஞ்சுவோம்….ஜனாஸா தொழுகை பினாங்கு கபிதான் பள்ளியில்
நாளை காலை
10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தகவல்:
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
0 comments:
Post a Comment