ஈராக்கில்
வடக்கு பகுதியை பிடித்தனர்
இன்று வட ஈராக் பகுதியில் முன்னேறிய ஐ.எஸ்.ஐ.எஸ்.
போராளிகள்
அந்த பகுதியில் உள்ள 3 நகரங்களை கைப்பற்றினர். வட ஈராக்கின் பெரும் பகுதி
தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில்
உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
ஈராக்கில்
ஷியா முஸ்லிம்
அரசுக்கு எதிராக
சன்னி முஸ்லிம்
பிரிவை சேர்ந்த
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் போர்க்கொடி
உயர்த்தி சண்டையிட்டு
வருகின்றனர்.
கடந்த
ஜூன் மாதம்
அந்த நாட்டின்
இரண்டாவது பெரிய
நகரமான மொசூல்
நகரைப்பிடித்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்
கை ஓங்கியது.
மேற்கு மற்றும்
வடக்கு பகுதிகளில்
உள்ள பல்வேறு
நகரங்களையும் அவர்கள் கைப்பற்றினர். தலைநகர் பாக்தாத்தையும்
பிடிக்கப்போவதாக மிரட்டி வந்தனர். ஆனால் அந்த
நகருக்கு 100 கி.மீ. தொலைவிலேயே படையை
நிறுத்திக்கொண்டு விட்டனர்.
வடக்கு
ஈராக் நகரான
ஜூமார் நகரை கைப்பற்றி
விட்டனர். அதன்
சுற்றுப்புற கிராமங்களும் போராளிகள் வசம் வந்து
விட்டன. ஜூமார் நகரையொட்டி அமைந்திருந்த
எண்ணெய் வயல்கலையும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்
கைப்பற்றி விட்டனர்.
மேலும் இரண்டு
நகர் பகுதிகளை
அவர்கள் கைப்பற்றினர்.
இதில் ஏராளமான
குர்திஷ் படையினர்
பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் தங்களது
வாகனங்களையும், ஆயுதங்களையும் கைவிட்டு விட்டு ஓட்டம்
பிடித்து விட்டனர்.
அதைத் தொடர்ந்து
அந்தப் பகுதிகளெல்லாம்
போராளிகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்து விட்டன’’ என
கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில்
ஈராக்கில் குர்திஷ்
படையினருடன் கடும் சண்டையிட்டு, மொசூல்அணையைஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் ஏற்கனவே கைப்பற்றியுள்ளனர்.
இன்று
வட ஈராக்
பகுதியில் முன்னேறிய
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் அந்த
பகுதியில் உள்ள
3 நகரங்களை கைப்பற்றினர். வட ஈராக்கின் பெரும்
பகுதி தற்போது
ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில்
உள்ளது.
0 comments:
Post a Comment