கர்ப்பிணி
தாய்மார்களுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு
அரசின் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை!
கர்ப்பிணித்
தாய்மார்கள் முறயீடு!!
குறை
நிறையுள்ள குழந்தைகளை இலங்கையிலிருந்து தூரமாக்கும் நோக்கத்துடன் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு
போஷாக்கு உணவுக்காக 20,ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இந்த நல்லாட்சியில்
அறிவிக்கப்பட்டு பொலனறுவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது..
உடன்
அமுலுக்கு வரும் வகையில் 20,ஆயிரம் ரூபா கொடுப்பனவு இவ்வாறு நாடுபூராவும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் என நிதி
அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் அறிவித்திருந்தார்.
ஆனால்,
இத்திட்டம் நாட்டின் தலைநகர் உட்பட ஏனைய பிரதேசங்களில் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை
என கர்ப்பிணித் தாய்மார்கள் முறையீடு செய்கின்றனர்.
நல்லாட்சி
அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள
தாமதம் பற்றி ஆராய்ந்து திட்டத்தை சீராக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்ற கோரிக்கை மக்களால் விடுக்கப்படுகின்றது.



0 comments:
Post a Comment