புதல்வர்
யோசித ராஜபக்ஸ கைது செய்யப்பட்ட பின்னர்
மஹிந்த குருநாகல் விகாரையில் வழிபாடு!
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று குருநாகல் யாபஹுவ
பிரதேச விகாரையொன்றில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
தனது
இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஸ கைது செய்யப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஸ பெரும்பாலும்
கொழும்பை விட்டு வெளியில் செல்லவில்லை.
இந்த
நிலையில், இன்று காலை அவர் யாபஹுவையிலுள்ள விகாரையொன்றுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அவரது
வருகை குறித்து அறிந்தவுடன் சுதந்திரக் கட்சியின் அரசியல்வாதியான சாலிந்த திசாநாயக்க
மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் உடனடியாக அவருக்கான வரவேற்பு
ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த விகாரைக்கு
மஹிந்த விஜயம் செய்திருப்பதை அறிந்தவுடன் பொதுமக்களும் பெருமளவில் திரண்டு வந்து அவருக்கு
ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.


0 comments:
Post a Comment