வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக விடயம்

கல்முனையில் பிரதி அமைச்சர் இருக்கும் நிலையில்

ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு அறிக்கை விடுவது ஏன்?

மக்கள் கேள்வி!



கல்முனையில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் இருக்கும் நிலையில் பிரதி அமைச்சர்  பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு கல்முனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக விடயத்தில் நடவடிக்கை எடுத்தாகிவிட்டது என்று முகநூலில் தகவல் வெளியிட்டுக் கொண்டிருப்பது ஏன் என மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு வருமானம் தேடிக் கொடுக்கக்கூடிய இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கல்முனையில் இருந்து இடமாறுவதனால் பொதுமக்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை.
ஆனால் இது விடயத்தில் காட்டும் அக்கறையை வாழ்விடங்களை இழந்த முஸ்லிம்களுக்காக அமைக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு காட்டப்படுவதாக இல்லை, தமிழர்கள் அரச அதிபர்களாக இருக்கும் நிலையில் தகுதியான முஸ்லிம்கள் இருந்தும்  எவரும் நியமிக்கப்படுவதாக இல்லை இது பற்றி சிந்தித்து  அக்கறைகாட்டி செயல்படுவதாகவும் இல்லை, இது போன்று இன்னும் பல விடயங்கள் இருக்கும் நிலையில் ஏன் இந்தப் பணியகத்தின் விடயத்தில் அதிக அக்கறை காட்டி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
எல்லாவத்திற்கும் மேலாக அமைச்சர் திருமதி தலதா அதுகொரல அவர்களை அமைச்சு காரியாலயத்தில் சந்தித்ததாக இவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.  ஆனால், உணவுச்சாலையில் அமைச்சர் உணவு உண்ணும் போதுதான் அவரோடு பேசிக்கொண்டிருக்கும் படம் வெளியாகியுள்ளது
இதோ பிரதி அமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஐ,எம்,மன்சூர் ஆகியோர்களின் அறிக்கைகள், .

கல்முனையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை இடமாற்ற எடுக்கும் நடவடிக்கையினை தடுப்பதற்குரியது சந்திப்பு (இன்று) பாராளுமன்றத்தில் உள்ள அமைச்சர் திருமதி தலதா அதுகொரல அவர்களது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடல் பற்றி கருத்து தெரிவித்த சுகாதர பிரதி அமைச்சர் பைசால் காசிம்...
" கடந்த வாரம் அமைச்சர் திருமதி தலதா அதுகொரல அவர்களுடன் இவ் விடயம் பற்றி பேசியதை தொடர்ந்து அவர் இன்று இவ் விடயம் பற்றி தீர்க்கமான முடிவு ஒன்றினை பெருவதவற்கு சந்திக்குமாறு கூறினார். இதனை தொடர்ந்து இன்று விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் ஆகியோருடன் இன்று சந்தித்தோம் , அவர் இவ் இடமாற்றம் இடம் பெறாது என உறுதிகூறியுள்ளதுடன். தற்போது இயங்கி வரும் கட்டிடத்தினை மாற்றி கல்முனையில் வேறு ஒரு கட்டிடத்தில் இவ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்வரும் காலங்களில் இயங்கும் எனவும் கூறினார். எனவே இவ் விடயம் பற்றி மக்கள் அச்சமடைய தேவையில்லை இவ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கல்முனையில் பிரதேசத்தில் தொடர்ந்து இயங்கவுள்ளது "

கல்முனையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூடப்பட மாட்டாது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் உறுதிபட தெரிவிப்பு..
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரதி அமைச்சர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஐ.எம்.மன்சூர், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் இன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விணக்கப்பாடு ஏற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் தலதா அத்துகோரளை " போதிய இடவசதி இன்மை காரணமாகவே கல்முனையிலிருந்து குறித்த பணியகத்தை இடமாற்ற தீர்மானித்ததாக " கூறினார்.
இதற்கு பதிலளித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் " கல்முனை கரையோரப் பிரதேசத்தில் போதுமான இடவசதியுடன் கூடிய இடத்தை தான் பெற்றுத்தருவதாக" உறுதிமொழி வழங்கியதை தொடர்ந்து கல்முனையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இடமாற்றுவது தொடர்பான திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

- மூத்த போராளி

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top