பாகிஸ்தானில் பஸ்ஸில் பயங்கர குண்டு வெடிப்பு:

15 பேர் பலி 30 பேர் காயம்




பாகிஸ்தானின் பெஷாவரில் பயணிகள் பஸ் ஒன்றில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 15 பேர் உயிரிழந்ததாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து போலீஸ் உயரதிகாரி முகம்மது காசிப் கூறுகையில், பஸ்ஸின்  உள்ளே வெடி பொருட்களை மறைத்து வைத்து, வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த போது  பஸ்ஸில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எனினும் தலைமை செயலக ஊழியர்களை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது என்று கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top