முதல்வர் ஜெயலலிதா காலமானார்
அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உயிர் இன்று மாலை 5.15 மணியளவில் பிரிந்தது. அவருக்கு வயது 68.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் திகதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை மூலம் தெரியப்படுத்தி வந்தது. முதல்வர் உடல்நலம் பெற்றுவிட்டதாகவும், விரைவில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டதால் தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர்.
அவர், எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற வேளையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால் கட்சியினர் கவலையில் ஆழ்ந்தனர். அப்பல்லோ மருத்துவமனை முன்பு விடிய விடிய காத்து நின்ற தொண்டர்கள், முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர். அதேசமயம் மருத்துவமனை மட்டுமின்றி சென்னை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலையங்களில் பணியாற்றும் அனைத்து பொலிஸாரும் விடுப்பு எதுவும் எடுக்காமல் காலையில் பணிக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அவசரமாக கூடி ஆலோனை நடத்தினர். தற்காலிக முதல் மந்திரியாக ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.
இந்த சூழ்நிலையில், சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் இன்று பிற்பகல் வெளியிட்ட புதிய செய்திக்குறிப்பில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அறிவித்தது. இதனால், அப்பல்லோ வாசலில் கூடி இருக்கும் அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அக்கட்சியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அதேசமயம், முதல்வருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே வெளியிட்ட அறிக்கையிலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்தார்.
எனவே, தொண்டர்களிடையே உள்ள கவலை மேலும் மேலும், உலகின் மிக உயர்ந்த உயிர் காக்கும் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று மாலை 5.15 மணியளவில் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது. இந்த செய்தியைக் கேட்டதும் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் திரண்டிருந்த கட்சியினர் கதறி அழுதனர்.
ஜெயலலிதா குறித்த தகவல்களை இன்னும் அரசாங்கமோ, அப்போலோ நிர்வாகமோ ஊர்ஜிதப்படுத்தவில்லை. அ.தி.மு.க கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது, தலைமைச் செயலக கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது என்று செய்திகள் வந்தன.ஆனால், தற்போது அவை மீண்டும் ஏற்றப்பட்டு இருக்கின்றன.தமிழக பொறுப்பு ஆளுநரோ, அப்போலோ நிர்வாகமோ இன்னும் எந்த தகவலையும் ஊர்ஜிதப்படுத்தவில்லை. மேலும் சிகிச்சைகள் தொடர்கிறது என்று அப்போலோ தரப்பில் தகவல் வருகிறது...!. அப்போலோவின் சங்கீதா ரெட்டி அளித்த தனியார் தொலைக்காட்சி பேட்டியில் , ' ஜெயலலிதாவிற்கு சிகிச்சை தொடர்கிறது' என அறிவித்துள்ளார்!
அப்போலோ மறுப்பு
எனினும் இன்று மாலை 05-49 மணிக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை குறிப்பு:
* ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா தாலுகாவில் 1948ம் ஆண்டு பிப்.24ம் தேதி பிறந்தார்.
* ஜெயலலிதாவின் இரண்டு வயதில் அவரது தந்தை ஜெயராம் காலமானார்.
* 10ம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் ஜெயலலிதா முதலிடம் பிடித்தார்.
* தமிழ், தெலுங்கு, கன்னடம் என 140 படங்கள் நடித்துள்ளார்.
* தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளையும் சரளமாக பேசுவார்.
* 1972ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது
* தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறு முறை பதவி வகித்துள்ளார்.
* 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சர் ஆனார்.
* 2001ம் ஆண்டு 2வது முறையாக முதலமைச்சர் ஆனார்.
* 2005-ம் ஆண்டு 3வது முறையாக முதலமைச்சர் ஆனார்.
* 2011-ம் ஆண்டு 4வது முறையாக முதலமைச்சர் ஆனார்.
* 2015-ம் ஆண்டு 4வது முறையாக முதலமைச்சர் ஆனார்.
0 comments:
Post a Comment