முன்னாள் தமிழக  முதலமைச்சர் மு. கருணாநிதியின்

உடல்நலம் பற்றி  காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை


திமுக தலைவரும், முன்னாள் தமிழக  முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி (92) சுவாசக் கோளாறு மற்றும் சளித் தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்றிரவு திடீரென அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலம் பற்றி காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சளித் தொற்று மற்றும் நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பு காரணமாகக் கருணாநிதிக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


எனினும் கருணாநிதியின் உடல்நலம் இயல்பாக உள்ளதென்றும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top