ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
முதலாவது நாளிலேயே உரையாற்றும் வாய்ப்பு
ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாக,
உலகத் தலைவர்களின் பொது விவாதம், கடந்த 19ஆம் திகதி தொடங்கி, நேற்று நிறைவுபெற்றது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், முதலாவது நாளிலேயே – 19ஆம் திகதி பிற்பகல் அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.
இந்தக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பங்கேற்று உரையாற்றியிருந்தார்.
காலை அமர்வில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றியிருந்தார். 27 ஆவது பேச்சாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையை சிங்களத்திலேயே நிகழ்த்தினார்.
அதேவேளை, இம்முறை பொதுச்சபை அமர்வில் பாலஸ்தீன பிரதிநிதிகள் குழவின் தலைவர் அதிகபட்சமாக 43 நிமிடங்கள் உரையாற்றியிருந்தார்.
அவரையடுத்து. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 41 நிமிடங்கள் உரையாற்றினார்.
லிதுவேனிய அதிபரின் உரையே மிகக் குறுகியதாக இருந்தது. அவர் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார்.
0 comments:
Post a Comment