கிழக்கு மாகாண சபையின் 

இறுதி அமர்வு நாளை


எதிர்வரும் 30ஆம் திகதியுடன் ஆயுட்காலம் முடிவடையும் கிழக்கு மாகாணசபையின் இறுதி அமர்வு நாளை திங்கட் கிழமை நடைபெறவுள்ளது.

2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் எட்டாம் திகதி கிழக்கு மாகாணத் தேர்தல் நடைபெற்றது. சபை நடவடிக்கைகள் செப்ரெம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகியது. 5 ஆண்டு காலப் பதவிக் காலம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

இந்தக் காலப் பகுதியில் கிழக்கு மாகாணசபை 85 அமர்வுகளை நடத்தியுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதியின் பின்னர் கிழக்கு மாகாணசபை ஆளுநரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top