17 இலட்சம் மாணவர்களுக்கு பசும்பால் வழங்க திட்டம்
முதல் கட்டமாக அடுத்த வாரம்
1500 மாணவர்களுக்கு
கலவானையில் ஆரம்பம்



கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் மாணவர்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்துவதுடன் பாலுற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டத்தின் கீழான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கப் பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் கலவானையில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் கலாநிதி சிறிலால் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 1500 மாணவர்களுக்கு அன்றைய தினம் பசும் பால் வழங்கப்படுவதுடன் பாலுற்பத்தியில் தன்னிறைவை காண்தபற்கான திட்டமும் இந்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் கூறினார்

நாட்டில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் போஷாக்கு குறைபாட்டுடன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு முதல் கட்டமாக ஒரு மாணவருக்கு 150 மில்லி லீற்றர் பால் பக்கெட் வழங்கப்படவுள்ளது.

17 இலட்சம் மாணவர்களுக்கு படிப்படியாக இந்த வேலைத்திட்டம் விரிவுப்படுத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். பசும் பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவு காண்பதற்கான திட்டத்தில் விளக்கமளித்த அவர் நாட்டில் கால்நடைகளுக்கான உணவு உற்பத்தி திட்டம் திருப்திகரமாக இல்லை.  இதனால் கூடுதலான வருமானத்தை பெறக்கூடிய துறையில் கிராம மக்களை ஊக்குவிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top