பெரும்
சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்
-
ஒன்றாக பிறந்து ஒன்றாக இறந்த
இரட்டை
சகோதரிகள்
நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக
ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும்
மீட்கப்பட்டுள்ளது.
அக்கரபத்தனை - டொரிங்டனில் ஆற்றுவெள்ளத்தில் இழுத்துச்
செல்லப்பட்ட இரட்டை சகோதரிகளில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மற்றுமொரு சிறுமியின் சடலம் இன்று
மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொரிங்டன் பாடசாலையில் தரம் 07 கல்வி கற்கும் 12 வயதுடைய
இரட்டை சகோதரிகளான மதியழகன் லெட்சுமி, மதியழகன் சங்கீதா
ஆகிய மாணவிகளே இவ்வாறு உயிரிழந்தனர்.
பாடசாலை விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் வெள்ளநீரில்
இழுத்துக் செல்லப்பட்டனர்.
மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு
பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment