மருத்துவர்
ஷாபி மீதான குற்றச்சாட்டு
-பரிசோதனைக்கு
வர மறுக்கும் தாய்மார்!
மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபி மீது குற்றம்
சுமத்தியுள்ள தாய்மாரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த கொழும்பு காசல் வீதி
பெண்கள் வைத்தியசாலை மற்றும் சொய்சா பெண்கள் வைத்தியசாலை ஆகியவற்றில் ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை எந்த தாய்மாரும் பரிசோதனைக்கு வரவில்லை என
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவப் பரிசோதனைக்கு நீண்ட நேரம் செல்லும் எனவும்
பரிசோதனைக்கு வைத்தியசாலைகளில் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும்
பரிசோதனைக்கு எவரும் வரவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில்
ஜாசிங்க கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment