ஆசிய மன்றத்தின் ஏற்பாட்டில்
கிழக்கு உள்ளூராட்சி அதிகாரிகள்
தென் கொரியா விஜயம்!
(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஆசிய
மன்றத்தின் கொய்கா செயற்திட்டத்தின் கீழ் கிழக்கு
மாகாணத்திலுள்ள சில உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களும்
மாகாண சபையின்
சில உயர்
அதிகாரிகளும் அடங்கிய குழுவொன்று நாளை மறுதினம்
ஞாயிற்றுக்கிழமை (25) தென் கொரியாவுக்கு
விஜயம் செய்யவுள்ளது.
கிழக்கு
மாகாணத்தில் ஆசிய மன்றம் தனது செயற்திட்டங்களை
முன்னெடுத்து வருகின்ற கல்முனை, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு
மாநகர சபைகள்
மற்றும் அம்பாறை
நகர சபை
ஆகியவற்றின் சார்பில் தலா இருவர் வீதம்
எட்டுப் பேர்
உட்பட மொத்தம்
15 பேர் இக்குழுவில்
இடம்பெறுகின்றனர் என ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்
திட்ட அதிகாரி
எம்.ஐ.எம்.வலீத்
தெரிவித்தார்.
ஆசியா
மன்றத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி கோபகுமார்
தம்பி, பிரதிப்
பணிப்பாளர் ஏ.சுபாகரன் ஆகியோரின் நேரடி
வழிகாட்டலில் இதன்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு
மாகாண உள்ளூராட்சி
ஆணையாளர் எம்.வை.சலீம்,
மாகாண பிரதம
பொறியியலாளர் ஏ.எஸ்.கௌரிபாலன், மாகாண
உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளர் ஏ.ரி.எம்.ராபி, மத்திய
சுற்றாடல் அதிகார
சபையின் தவிசாளர்
டி.டபிள்யூ.பத்மசிங்க, மட்டக்களப்பு
மாவட்ட உதவி
உள்ளூராட்சி ஆணையாளர் கே.சித்திரவேல் ஆகியோரும்
கல்முனை
மாநகர சபையின்
சார்பில் பிரதம
சுகாதார வைத்திய
அதிகாரி டாக்டர்
எம்.சி.எம்.மாஹிர்,
உள்ளூராட்சி உதவியாளர் எம்.சி.சர்ஜூன்
ஆகியோரும் அக்கரைப்பற்று
மாநகர சபையின்
சார்பில் அதன்
செயலாளர் ஏ.எம்.ஹபீபுர்
ரஹ்மான், தொழில்
நுட்ப உத்தியோகத்தர்
ஏ.எம்.இர்பான் ஆகியோரும்
மட்டக்களப்பு மாநகர சபையின் சார்பில் பிரதி
ஆணையாளர் என்.தனஞ்சயன், பொதுச்
சுகாதாரப் பரிசோதகர்
வி.ரமேஷ்குமார்
ஆகியோரும் அம்பாறை
நகர சபையின்
சார்பில் திண்மக்
கழிவு முகாமைத்துவ
உத்தியோகத்தர் கே.எம்.எஸ்.இந்திக்க,
மேற்பார்வையாளர் ஜி.டபிள்யூ.சமிந்த ஆகியோரும்
ஆசிய
மன்றத்தின் சார்பில் நிகழ்ச்சித் திட்ட அதிகாரிகளான
எம்.ஐ.எம்.வலீத்,
சி.சசிதரன்
ஆகியோரும் தென்
கொரியா செல்லும்
இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர்
11 நாட்கள் தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளுக்கும்
விஜயம் செய்து
திண்மக் கழிவு
முகாமைத்துவம் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதுடன்
அது தொடர்பில்
பல்வேறு வகையான
பயிற்சிகளையும் பெற்றுக் கொள்வர் என ஆசிய
மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.
இதன்போது
தென் கொரியாவில்
உள்ள உள்ளூராட்சி
மன்றங்களின் நடைமுறைகள் தொடர்பாகவும் அங்குள்ள நகர
அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதி மற்றும் வருமான
முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் குறித்தும்
கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்று அவர் மேலும்
குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment