மோடி பதவி ஏற்பு விழா
:
சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு...
இந்திய
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி
பதவி ஏற்க
உள்ள விழாவில்
பங்கேற்க பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ்
ஷெரிப், இலங்கை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட
சார்க் தலைவர்களுக்கு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக
இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய
குடியரத் தலைவர் மாளிகையின் திறந்தவெளி
முற்றத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெற
உள்ள விழாவில்
மோடி பிரதமராக
பதவியேற்க உள்ளார்.
முன்னாள் பிரதமர்
சந்திரசேகர், வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக
15 ஆண்டுகளுக்குப் பிறகு திறந்தவெளி
முற்றத்தில் பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற
உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
தேசிய
ஜனநாயக கூட்டணித்
தலைவர்கள் உட்பட
சுமார் 3000 பேர் பங்கேற்க உள்ள இவ்விழாவிற்கு
தெற்காசிய நாடுகளின்
கூட்டமைப்பான சார்க் தலைவர்களையும் அழைக்க மோடி
முடிவு செய்தார்.
தமது விருப்பத்தை
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மோடி
தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இலங்கை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட 7 நாடுகளின்
தலைவர்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்ப இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக
இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment