தாய்லாந்தில் ராணுவ ஆட்சி அமுல்:
தாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா நீக்கப்பட்டு இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு ராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்து
பிரதமராக இருந்த
யிங்லக் ஷினவத்ரா
பதவி விலகக்
கோரி ஆறு
மாதங்களுக்கும் மேல் எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த
போராட்டத்தினால் அந்நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி
நிலவி வந்த
நிலையில், அதிகாரத்தைத்
தவறாக பயன்படுத்திய
குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றம் அவரை பதவியிலிருந்து
நீக்கியது.
அதனையடுத்து
நிவட்டும்ராங் பூன்சாங்பைசன் என்பவர் தலைமையில் இடைக்கால
அரசு அமைக்கப்பட்டும்,
அது முழுமையாக
செயல்பட முடியாத
நிலை இருந்து
வருகிறது.
இந்நிலையில்,
அந்நாட்டின் ராணுவத் தொலைக்காட்சியில் இன்று நேரலையில் தோன்றி
ராணுவ தளபதி
பிரயத் சான்-ஒ- சா, இன்று (22 ஆம்
திகதி) மாலை
4.30 மணி முதல்
தாய்லாந்தில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நேற்று
முன்தினம் தாய்லாந்து
ராணுவம் சார்பில்
வெளியிடப்பட்ட அறிவிப்பில்: நாட்டில் சட்டம், ஒழுங்கை
நிலைநாட்டுவதும், அனைத்து தரப்பினரின் பாதுகாப்பை உறுதி
செய்வதுமே ராணுவ
பிரகடனத்தின் நோக்கம். இந்த அறிவிப்பால் மக்கள்
பீதியடைய வேண்டாம்.
அனைவரும் வழக்கம்போல்
தங்கள் அலுவல்களைத்
தொடரலாம். ராணுவ
ஆட்சியை பிரகடனப்படுத்தியிருப்பதால்,
ராணுவம் ஆட்சிக்
கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ளது என்று அர்த்தமல்ல'' என்று
தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment