காஸா குழந்தைகள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை இல்லையா?
10 வயது சிறுவன்
உலக தலைவர்களிடம் கேள்வி
காஸா
மீதான இஸ்ரேலின்
தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள்
இறந்துள்ள நிலையில்,
பல குழந்தைகள்
மருத்துவமனைகளில் உயிருக்கு போராடி வருகின்றனர். காஸாவில்
உயிரிழந்த 1464 பேரில், 500 பேர் குழந்தைகள் என்று
ஐநா சபை
தெரிவித்துள்ளது. மார்சூப் மோஷா எல் வான்
என்ற 6 வயது
குழந்தை தன்னுடைய
கல்லீரலில் குண்டு துளைத்து தற்போது உயிருக்கு போராடிக்
கொண்டிருக்கின்றது.
காயமடைந்து
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 வயது
சிறுவனான முகம்மது
அலைலா கூறியிருப்பதாவது,
' நான் வலியை உணர்கின்றேன் ஏனெனில் காஸாவின் குழந்தைகளுக்கு சுதந்திர பூமியில் வாழ கொடுத்து வைக்கவில்லை. விரைவில் அவர்களுக்கு
சுதந்திரம் கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன்.காஸாவின் குழந்தைகளுக்கு சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை இல்லையா என்ன? மற்ற குழந்தைகள் போல ஏன் எங்களால் வாழ முடியவில்லை? உலகின் தலைவர்களிடம் நான் கேட்கின்றேன். எங்களுக்கான சுதந்திரமான வாழ்க்கையை அளியுங்கள்'. என்று முகம்மது
கூறிய வரிகள்
இஸ்ரேல் மட்டுமல்ல
மற்ற நாடுகளுக்கும்
சாட்டையடி வார்த்தையாக
அமைத்துள்ளது.
0 comments:
Post a Comment