போர் நிறுத்தத்தை மீறி
இஸ்ரேல் - ஹமாஸ் மீண்டும் மோதல்: பாலஸ்தீனியர்கள்
17 பேர் பலி
காஸா
பகுதியில் வெள்ளிக்கிழமை
மூன்று நாள்
போர் நிறுத்தத்தை
மீறி மீண்டும்
இஸ்ரேல் - ஹமாஸ்
இடையே சண்டை
மூண்டது. இதில்
பாலஸ்தீனியர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் தரப்பில்
படைவீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
ஐ.நா., அமெரிக்கா
ஆகியவற்றின் போர் நிறுத்த உடன்படிக்கை அறிவிப்பை
கிரீன்வீச் நேரப்படி இன்று காலை 5 மணிக்கு
இஸ்ரேல் - ஹமாஸ்
இருதரப்பும் முறித்துக் கொண்டு மீண்டும் சண்டையில்
ஈடுபட்டன. நான்காவது
வாரமாக இரு
தரப்புக்கும் தொடரும் சண்டையில், போர் நிறுத்தத்துக்கு
எந்த வித
உத்தரவாதத்தையும் தரமுடியாது என ஏற்கெனவே அமெரிக்க
வெளியுறவு அமைச்சர்
ஜான் கெர்ரி
அறிவித்திருந்தார். இஸ்ரேல்- ஹமாஸ்
இரு தரப்புமே
போர் நிறுத்தத்தை
மதிப்பதாக முன்னர்
கூறியிருந்த போதிலும், அதனை முறித்துக் கொண்டு
மீண்டும் சண்டையைத்
தொடர்ந்துள்ளன.
முன்னதாக
மனித நேய
அடிப்படையில், குறைந்தது 4 சண்டை நிறுத்த அறிவிப்பை
வெளியிட்டு, பின்னர் மனஸ்தாபங்களால் மீண்டும் அடுத்த
சில மணி
நேரங்களிலேயே சண்டையை இருதரப்புமே தொடர்ந்துள்ளன.
இந்நிலையில்
வியாழக்கிழமை நேற்று மாலை தனது தரப்பில்
5 வீரர்கள் உயிரிழந்தாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
கடந்த
மாதம் 8ஆம் திகதி தொடங்கிய
இந்தச் சண்டையில்
இதுவரை 1464 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தரப்பில் இதுவரை
61 இராணுவ வீரர்களும்,
பொதுமக்கள் 3 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
0 comments:
Post a Comment