காஸாவில் ஐ.நா பாடசாலைகள் மீது இஸ்ரேல் கண்மூடித் தாக்குதல்;
அப்பாவி குழந்தைகள்
10-க்கும் மேற்பட்டோர் பேர் பலி
இஸ்ரேல் இன்று காஸாவின் தெற்கு பகுதி நகரமான ரஃபாவிலுள்ள
பாடசாலை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் சிறுவர், சிறுமிகள்
உட்பட 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரினால்
உற்றார் உறவினர்களை
இழந்த குழந்தைகள்
படிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை
நடத்தும் பள்ளி
ஆகும்.இதில்
இந்த பாடசாலையில்
3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிப்பது
குறிப்பிடத்தக்கது.
கடந்த
10 நாட்களில் பாலஸ்தீனத்தில் செயல்படும் ஐநா பாடசாலைகள்
மீது நடத்தப்பட்ட
3வது மிகப்பெரிய
தாக்குதல் இதுவாகும்.
வடக்கு பாலஸ்தீனத்தின்
ஜபாலியா நகரில்
நான்கு நாட்களுக்கு
முன்பு பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்
16 பேர் கொல்லப்பட்டனர்.
இரு
தரப்பும் சண்டை
நிறுத்தத்தை மீறி தாக்குதல் தொடுத்துவருவது சர்வதேச
சமூகத்தை அதிர்ச்சியில்
ஆழ்த்தி உள்ளன.இதனால் ஐநா
பொதுச்செயலாளர் பான் கீ மூன் அதிருப்தி
கருத்துக்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment