இஸ்ரேலின் கண்மூடித்தனமான
தாக்குதலில் காஸாவில்
ஷஹீதானவர்களின் எண்ணிக்கை 1,762ஆக உயர்வு
இஸ்ரேல்
இராணுவத்தினருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும்
இடையே கடந்த
ஜூலை மாதம் 8 ஆம் திகதி தொடக்கம்
கடும் சண்டை நடந்து வருகிறது.
ஹமாஸ்
போராளிகளும் இஸ்ரேல் படையும் சேர்ந்து 3,127 ராகெட்
குண்டுகள் வீசி
தாக்கியுள்ளனர். இதுவரை பாலஸ்தீனர்கள் 1762 பேர்
பலியாயினர் என அங்கிருந்து வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன. இவர்களில் 398 குழந்தைகளும்
209 பெண்களும் 74 முதியோர்களும் அடங்குகின்றனர். 9212 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை,
64 இஸ்ரேல் இராணுவ வீரர்களும் 3 பொதுமக்களும் என மொத்தமாக 67 பேர் உயிரிழந்திருப்பதாக
இஸ்ரேல் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐ.நா. குழு
அனுப்பிய நிவாரண
உதவி காஸாவில்
4ல் ஒரு
பகுதியினருக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்றும் சுமார்
4 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும்
ஏஜென்ஸி செய்திகள்
தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment