காஸாமுனையில் இஸ்ரேலின்
கண்மூடித்தனமான தாக்குதலில்
ஒரே நாளில்
160 பாலஸ்தீனர்கள் பலி
இதுவரை ஷஹீதான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1655 ஆக உயர்ந்தது
இஸ்ரேலுக்கும்,
காஸாமுனை ஹமாஸ்
போராளிகளுக்கும் இடையேயான 3 நாள் சண்டை நிறுத்தம்
நேற்று முன்தினம்
அமுலுக்கு வந்த
சில மணி
நேரத்திலேயே அது தோல்வியில் முடிந்தது. காஸாமுனையில் ரபா
பகுதியில் இஸ்ரேல்
கடுமையான தாக்குதலை
தொடுத்தது. இடைவிடாது குண்டுமழை பொழிந்தது. இந்த
தாக்குதலில் குறைந்தது 160 பாலஸ்தீனர்கள்
கொன்று குவிக்கப்பட்டனர்.
இத்துடன் சேர்த்து
இஸ்ரேல் தாக்குதலில்
பலியான பாலஸ்தீனர்களின்
எண்ணிக்கை 1655 ஆகும் . இதில் பெரும்பாலானவர்கள்
அப்பாவி பொதுமக்கள்.
சுமார் 8900 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸ்
இயக்கத்தினர் 51 ராக்கெட்டுகளை வீசியதுடன், பீரங்கி தாக்குதலையும்
நடத்தியதாக இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர்
கூறியுள்ளார். தங்கள் தரப்பில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதுடன்,
ஒருவர் காஸாமுனையில்
கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை 63 இஸ்ரேல் இராணுவ வீரர்களும் 2 பொதுமக்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் தரப்பிலிருந்து
அறிவிக்கப்படுகின்றது.
இரு
தரப்பும் சண்டை
நிறுத்தத்தை மீறி தாக்குதல் தொடுத்துவருவது சர்வதேச
சமூகத்தை அதிர்ச்சியில்
ஆழ்த்தி உள்ளன.
0 comments:
Post a Comment