எயாடெல் அனுசரணையில்
கல்முனை ஸாஹிறாக் கல்லூரி
பழைய மாணவர் கிரிக்கெட்
சுற்றுப் போட்டி
எயாடெல்
ஸஹிரியன் 2014 சம்பியன் கிண்ணத்தை
2011 பழைய
மாணவர் குழு சுவீகரித்துக் கொண்டது.
கல்முனை
ஸாஹிறாக் கல்லூரியின்
65 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு கல்லூரியின் பழைய
மாணவர் சங்கம் எயாடெல் அனுசரணையில் கல்லூரி மைதானத்தில்
ஒழுங்கு செய்திருந்த
பழைய மாணவர்
குழுக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்
போட்டியில் எயாடெல் ஸஹிரியன் 2014 சம்பியன்
கிண்ணத்தை 2011 பழைய மாணவர் குழு சுவீகரித்துக்
கொண்டது.
8 ஓவர்கள்
மட்டுப்படுத்தப்பட்ட இச் சுற்றுப்
போட்டியில் கல்லூரியின் பழைய மாணவர் அணிகளான
1999 ( செஸ்டோ ), 2003, 2007, 2009, 2010,
2011, 2013, பேர்ள்ஸ் ஒப் ஸஹிரா,
கொழும்பு பழைய
மாணவர் அணி
ஆகிய 9 அணிகள்
பங்கேற்றன.
முதலில்
துடுப்பெடுத்தாடிய 1999 பழைய மாணவர்
அணி 8 ஓவர்களில்
8 விக்கட்டுக்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய 2009 பழைய மாணவர்
அணி 4.1 ஓவர்களில்
2 விக்கட்டுக்களை இழந்து 44 ஒட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுக்களால்
வெற்றி பெற்று
இறுதிப் போட்டிக்கு
தகுதி பெற்றது.
இரண்டாவது
அரையிறுதிப் போட்டியில் 2007 பழைய மாணவர் அணி
8 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 54 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய
2011 அணி 7.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 55 ஓட்டங்களைப் பெற்று இறுதிப்
போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்
போட்டியில் 2009 பழைய மாணவர் அணியும், 2011 பழைய
மாணவர் அணியும்
போட்டியில் ஈடுபட்டது.முதலில் துடுப்பெடுத்தாடிய 2011 அணி 8 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து
58 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2009 பழைய மாணவர் அணி 8 ஓவர்களில்
6 விக்கட்டுக்களை
இழந்து 45 ஓட்டங்களைப்
பெற்று தோல்வியினை
தழுவிக் கொண்டது.
இறுதிப் போட்டியில்
13 ஓட்டங்களினால் 2011 பழைய மாணவர்
அணி வெற்றி
பெற்று எயார்டெல்
- ஸஹிரியன் 2014 சம்பியன் கிண்ணத்தையும்
பணப்பரிசினையும் பெற்றுக் கொண்டது.
போட்டிகளுக்கு
அம்பாறை மாவட்ட
கரையோரப்பிரதேச நடுவர் சங்கத்தைச் சேர்ந்த எம்.ஏ.றபீக்,
ஏ.எம்.றஜீன், ஐ.எம்.கடாபி,
ரீ.கே.எம்.சிராஜ்,
ஏ.றஸுல்,
ஏ.டபிள்யு.எம்.ஜெஸ்மின்
ஆகியோர் கடமையாற்றினார்கள்.
.
0 comments:
Post a Comment