காஸா மீது 26ஆவது நாளாக நடத்தப்படும் தாக்குதலில்
உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,712 ஆக உயர்ந்துள்ளது

உயிரிழந்தவர்களில் 398 குழந்தைகள். 207 பெண்கள், 74 வயோதிபர்கள் அடங்கியுள்ளனர்.

ஹமாஸ் போராளிகளால் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், காஸாவின் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில், ஒரே நாளில் 210 பாலஸ்தீனர்கள் பலியாகினர் என அறிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து காஸா மீது 26ஆவது நாளாக நடத்தப்படும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,712 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,900ஆகவும் உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 398 குழந்தைகள். 207 பெண்கள், 74 வயோதிபர்கள் அடங்கியுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 64 இராணுவ வீரர்களும் 3 பொதுமக்களும் என மொத்தமாக 67 பேர் உயிரிழந்துள்ளனர் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
முன்னதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 72 மணி நேர போர் நிறுத்தம் மீறப்பட்டதைத் தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 160 பாலஸ்தீனர்ளும், காஸாவின் ரஃபா பகுதியில் அன்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பாலஸ்தீனர்களும் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்று காஸா பகுதி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ""போர் நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை மீறிய ஹமாஸ் போராளிகள், தங்களது நாட்டைச் சேர்ந்த 2 இராணுவ வீரர்களைக் கொன்றுள்ளனர். மேலும் ரஃபா பகுதியில் ஒரு இராணுவ வீரரை கடுத்திச் சென்றுள்ளனர்'' என்று குற்றம் சாட்டியுள்ள இஸ்ரேல் இராணுவம், காஸா மீது சனிக்கிழமை 51 ராக்கெட் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசியது.
இதற்கிடையே இஸ்ரேல் இராணுவ வீரர்கள் 2 பேர் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்றுள்ள ஹமாஸ் போராளிகள், தாங்கள் .நா. மற்றும் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை மீறவில்லை என்றும், போர் நிறுத்தம் தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இராணுவ வீரர் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக ஹமாஸ் போராட்ட இயக்கத்தின் ஆயுதப்படைப் பிரிவான எஸ்ùஸடின் அல்-காஸம் வெளியிட்டுள்ள செய்தியில், "இஸ்ரேல் வீரர் கடத்தப்பட்டதாக கூறப்படும் பகுதியில் எங்கள் ஆதரவு படையினர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததால், அந்த நேரத்தில் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும், கடத்தப்பட்டதாக கூறப்படும் அந்த வீரர் குறித்து இதுவரை எந்தத் தவலும் இல்லை. எனவே அந்தப் பகுதியில் நடைபெற்ற சண்டையில் இஸ்ரேல் இராணுவ வீரர் உயிரிழந்திருக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-காஸா இடையேயான 72 மணி நேர போர் நிறுத்தம் மீறப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஒபாமா, ""காஸா பகுதியில் நிலவும் மோசமான சூழ்நிலைகளுக்கு தீர்வு காண ஹமாஸ் போராளிகள் விரும்பினால், அவர்கள் கடத்தி வைத்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரரை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஹமாஸ் குழுவினரின் தாக்குதலுக்கு எதிராக தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. எனினும் தாக்குதல்களால் பாலஸ்தீன பகுதியில் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
இஸ்ரேலில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். காஸாவில் நிலையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சிக்கும்' என்று ஒபாமா தெரிவித்தார்.
காஸா பகுதியில் நடத்தப்படும் தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் விதமாக ரஃபா எல்லையைத் திறக்க எகிப்து அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக வெள்ளிக்கிழமை இந்த எல்லை அருகே நிகழ்த்தப்பட்ட கடும் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு கருதி எல்லையை மூட எகிப்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ரஃபா எல்லைப் பகுதி வழியாக மட்டுமே காயமடைந்தவர்கள் எகிப்துக்குள் வர முடியும் என்பதால் அதனை மீண்டும் திறக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.






The soldier's family held spoke to press outside their home in Kfar Saba after being told of his death


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top