ஆபரேஷன் மூவர்:

அசப்பில் ஒன்றுபோல் உள்ள குழந்தைகள்

கண்டறிய வித்தியாசமான அடையாளம்

சவுத் வேல்ஸ் பண்டிபூல் பகுதியை சேர்ந்த தம்பதிகள்  கரண் - இயன் கில்பர்ட் இந்த தம்பதிகளுக்கு  ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகளும்  எந்த வித்தியாசமும் இல்லாமல் அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்கின்றன. அந்த குழந்தைகளை அதன் பெற்றோர்களுக்கே அடையாளம் தெரியவில்லை. எந்த குழந்தைக்கு பால் கொடுத்தோம், எந்த குழந்தைக்கு பால்  கொடுக்கவில்லை, எந்த குழந்தைக்கு குளிப்பாட்டி டிரஸ் மாற்றினோம் என்று புரியாமல் குழம்பி தவித்து வந்தனர். மூன்று குழந்தைகளுக்கும் பேபன் , மாடிசன் மற்றும் பைகே என பெயரிட்டு உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது
தற்போது பிறந்து உள்ள 3 குழந்தைகளை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படுகிறது . இதற்காக குழந்தையின் தந்தை ஒரு வித்தியாசமான யோசனையை தனது மனைவிக்கு கொடுத்தார். அந்த யோசனையின்படி மூன்று குழந்தைகளின் நகங்களிலும் மூன்று வெவ்வேறு நிறங்களில் நக  பாலீஷ் போட்டு குழந்தைகளின் வித்தியாசத்தை கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி குழந்தை பேபனுக்கு பிங்க் கலரிலும், மாடிசன் புதினா பச்சை, பைகே ஊதா கலரும் காலின் பெருவிரல் நகத்தில் வண்ணம் தீட்டி உள்ளனர்.
இந்த மூன்று குழந்தைகளுக்காக வாரந்தோறும் 84 பாட்டில்கள் பால் மற்றும் 120 நேப்பிஸ் என்று கூறப்படும் குழந்தைகளின் ஆடைகளை பயன்படுத்துவதாகவும் அதன் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து குழந்தையின் தாயார் கிரண் கூறும் போது:

இது எங்களுக்கு வித்தியாசமான வேடிக்கையான ஆண்டாக உள்ளது. இராணுவ நடவடிக்கை மாதிரி  இதை நாங்கள் ’’ஆபரேஷன் மூவர்’’  என அழைக்கிறோம்.எங்களுக்கு  மூன்று சிக்கல் (treble trouble )ஆனால் இதற்கு வேறு வழி இல்லை.இவர்கள் ஒரு வயதை அடையும் முன்பே பெரிய டிவி ஸ்டாராகி விட்டனர்.இவர்கள் எங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவரும் அழகான பெண்கள் இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top