தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில்
அரசியல் தலையீடுகள் நடப்பது ஏற்புடையதல்ல..!!
(துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்)

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவுன்சில் தெரிவின் போது முஸ்லிம் காங்கிரஸ் சிபாரிசு செய்த நபர்கள் புறக்கணிக்கப்பட்டதாக மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தனது பலத்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
9 பேர் தெரிவினுள் 4 முஸ்லிம்களும்,4 சிங்களவர்களும்,1 தமிழர் என தெரிவு செய்யப்பட்டிருப்பது இன விகிதாசார அடிப்படையில் சரியானதா..? என கேள்விகள் பல எழுந்தாலும்,தற்போதைய இலங்கையின் நிலவரத்தின் படி இனவாதங்கள் ஏற்படுத்தும் கருத்துக்களை அதிகம் சிலாகிப்பது ஆபத்தானது.
இங்கே நடந்த தெரிவின் அடிப்படையை,அதாவது தாங்கள் எவ்வாறு இத் தெரிவை செய்தோம்..? என்ற விடயத்தை  பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் நிச்சயம் மக்களிற்கு தெளிவு படுத்தப்பட வேண்டிய கடப்பாடு உள்ளது.
எது..?எவ்வாறு..? இருப்பினும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்படும் இவ்வாறான அரசியல் முரண்பாடுகள் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் எதிர்காலச் செயற்பாடுகளிற்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால் இவ்வாறான செயற்பாடுகளை நீடிக்க விடுவது ஏற்புடையதல்ல.
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்கு அரசியல் ரீதியான பல தேவை உள்ளதால் தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அரசியற் பங்களிப்புக்கள் நிச்சயம் தேவை.
ஆகையால் அனைத்து அரசியற் கட்சிகளையும் அரவணைத்து தென் கிழக்கு பல்கலைக்கழகம் பயணிப்பதே அதன் எதிர்கால செயற்பாடுகளுக்கு உசிதமானதாக அமையும்.
முஸ்லிம் காங்கிரஸ் சிபாரிசு செய்த நபர்கள் புறக்கணிக்கப்பட்டு வேறு தங்களுக்கு சார்பானவர்கள் நியமிக்கப்படுவார்களாக இருந்தார்.எதிர்காலத்திலே மு.கா தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை தன் கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முயற்சிக்கும்.முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தில்,அதிலும் குறிப்பாக முஸ்லிம்களிற்கென்றுள்ள பல்கலைக்கழகத்தில் மு.கா நிராகரிக்கப்படுவதை மு.கா அணி ஒரு போதும் ஜீரனிக்காது.இலங்கையின் மிகப் பெரிய கட்சியாக திகழும் மு.கா நிராகரிக்கப்படுவதும் ஏற்புடையதல்ல. இதன் போது ஏற்படப் போகும் மோதல்களால் பாதிக்கப்படுவது அரசியல் வாதிகள் அல்ல.தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் எதிர்காலச் செயற்பாடுகளே.
அண்மையில் தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் அரசியல் வாழ்க்கைக்கு தயாராகி வருவதால் "அரண்டவன் கண்னுக்கு இருண்டதெல்லாம் பேயாம்" என்ற கதையாட்டம் இவ் அரசியற் முரண்பாடுகள் ஏற்பட அடிப்படையாய் அமைந்திருக்கலாம்.
எனினும்,முஸ்லிம்களிற்கென்ற ஒரே ஒரு தனித்துவமான பல்கலைக்கழகமாக தென் கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளதால் அனைத்து முஸ்லிம்களும் இவ் விடயத்தில் அதிகம் கரிசனை கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top