தஞ்சம் அடையும் போராட்டம் வாபஸ்
ராமேஸ்வரம்
மீனவர்கள் கச்சத்தீவில்
தஞ்சம் அடையும்
போராட்டத்தை வாபஸ் செய்துள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதியை
ஏற்று போராட்டம்
வாபஸ் பெற்றதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைப்
படை தமிழக
மீனவர்களை தொடர்ந்து
சிறைப்பிடிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த
மாநில அரசுக்கு
கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைச் சிறைகளில்
உள்ள மீனவர்களை உடனடியாக
விடுவிக்கவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
கச்சத்தீவு
செல்ல ஆயிரக்கணக்கான
மீனவர்கள் வேர்க்கோடு
திரண்டனர். வேர்க்கோடில் இருந்து படகுக்கரைக்கு பேரணியாகச்
செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
மீனவர் சங்கத்
தலைவரை தொடர்பு
கொண்டு இந்திய
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
10 நாளில் மீனவர்கள்
மற்றும் படகுகள்
மீட்க நடவடிக்கை
எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். மீட்டுத்தராவிட்டால்
மத்திய வெளியுறவு
துறை அமைச்சர்
சுஷ்மாவை சந்திக்க
ஏற்பாடு செய்யப்படும்
எனவும் உறுதியளித்தார்.
பொன்.ராதாகிருஷ்ணன்
உறுதியை ஏற்று
மீனவர்கள் கச்சத்தீவு
செல்வதை நிறுத்தி
வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment