ஈராக்
எண்ணெய் கிணறுகளை
ஐஎஸ்ஐஎஸ் போராளிகள்
கைப்பற்றினர்
ஈராக்கின்
வடக்கே அமைந்துள்ள
2 எண்ணெய் கிணறுகளை
ஐஎஸ்ஐஎஸ் போராளிகள்
கைப்பற்றியுள்ளார்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
இதைத்
தொடர்ந்து போராளிகளுக்கும்
குர்தீஷ் அரசு
இராணுவத்தினருக்கும் இடையே கடும்
துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. ஈராக்கில்
ஷியா பிரிவு
அரசுக்கு எதிராக
சன்னி பிரிவு
ஆதரவு பெற்ற
ஐஎஸ்ஐஎஸ் போராளிகள்
கடந்த 2 மாதங்களாக
தாக்குதல் நடத்தி
வருகின்றனர். திக்ரித், மொசூல் உட்பட பல்வேறு
நகரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.அங்கு அரசு படையினருக்கும்
ஐஎஸ்ஐஎஸ் போராளிகளுக்கும்
இடையே கடும்
சண்டை நடைபெற்று
வருகிறது.இத்தாக்குதலில்
ஏராளமான மக்கள்
பலியாகி வருகின்றனர்.இந்நிலையில், ஈராக்கின்
வடக்கே குர்தீஷ்
இனத்தவர் ஆளும்
பகுதிகளையும் ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் கைப்பற்றும் முயற்சிகளில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,
அய்ன் ஜாலா
மற்றும் பாத்மாவில்
உள்ள, ஒரு
நாளைக்கு 20 ஆயிரம் பீப்பாக்கள் எண்ணெய்
உற்பத்தி செய்யும்
2 எண்ணெய் கிணறுகளை
ஐஎஸ்ஐஎஸ் போராளிகள்
கைப்பற்றி உள்ளனர்
என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment