மாநகர முதல்வர்கள் உறுப்பினர்களுக்கான
இந்தியாவில் இருவாரகால கல்விசார் பயிற்சி பட்டறை
போங்கீர் மாநகராட்சிக்கு விஜயம்.
ஏ.ஆர்.பறக்கத்துள்ளாஹ்
பயிற்சி
நெறியின் மூன்றாம்
நாள் பயிற்சி
நெறியில் இன்று
(2014.08.06) தெலுங்கான மாநிலத்தின் மாநகர
சபைகளில் ஒன்றான
போகூர் மாநகராட்சிக்கு
எமது குழுவினர்
விஜயம் மேற்கொண்டனர்.
போங்கீர்
மாநகராட்சி மேயர், உறுப்பினர்கள், ஆணையாளர்களுடன் இணைந்து
திண்மக்கழிவு தொடர்பாக குறித்த மாநகராட்சி மேற்கொண்டுவரும்
நடவடிக்கைகளை களத்திச் சென்று பார்வையிட்டோம்.
மேயர் லாவன்யா தலைமையில் இலங்கையில் காணப்படும் மாநகர சபைகளுக்கும் இந்தியாவில் காணப்படும் மாநகராட்சிக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது.
மேலும் அன்றாடம் வீடுகளில் குப்பைகளை சேகரிப்பதில் ஏற்படும் விரையத்தினை தவிர்ப்பதற்காக தொழில்நுட்ப ரீதியிலான கண்காணிப்பு மற்றும் வரி அறவீடல் முறைமையில் கையாளப்படும் நவீன தொழில்நுட்பம் என்பவற்றை நேரில் பார்வையிட்டதோடு அவை தொடர்பான விளக்கங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
போங்கீர் மாநகராட்சி முதல்வர் லாவன்யாவினால் விஜயம் செய்த இலங்கை குழுவினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment