ஊவா மாகாண சபைக்கு
32 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு

617 பேர் போட்டி

ஊவா மாகாண சபையில் 32 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக 617 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அரசியல் கட்சிகள் சார்பாக 414 வேட்பாளர்களும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 203 வேட்பாளர்களும் இந்த தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 10 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
மொணராகலை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடிகின்றன.

வாக்கெடுப்பு எதிர்வரும்  2014.09.20 ஆம் திகதி  சனிக்கிழமை முற்பகல் 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை நடாத்துவதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவுரை வழங்கியுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top