சிரியா
இராணுவ தளம் போராளிகள் வசமானது
சிரியாவின்
ராக்கா மாகாணத்தில்
உள்ள இராணுவத்
தளத்தை ஐஎஸ்.ஐஎஸ்
அமைப்பைச் சேர்ந்த
போராளிகள் புதன்கிழமை
கைப்பற்றினர். இந்தத் தாக்குதலின்போது இராணுவ வீரர்கள்
27 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து
சிரியாவில் மனித உரிமை விவகாரங்களை கண்காணித்து
வரும் அமைப்பினர்
கூறியிருப்பதாவது:
ராக்கா
மாகாணத்தில் உள்ள 93ஆவது படைப் பிரிவின்
மீது போராளிகள்
புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து
போராளிகளுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே கடுமையான
துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் இராணுவ
வீரர்கள் 27 பேர் உயிரிழந்தனர். 11 போராளிகளும் கொல்லப்பட்டனர்.
அந்த இராணுவத்
தளம் போராளிகளின்
கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
ராக்கா
மாகாணத்தின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளை
ஐஎஸ்.ஐஎஸ் அமைப்பைச்
சேர்ந்த போராளிகள்
ஏற்கெனவே கைப்பற்றியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
சிரியாவில்
கடந்த ஆண்டு
போர் தொடங்கப்பட்டது
முதல் ஈராக்
எல்லையில் உள்ள
டியீர் எஸ்ஸார்,
ராக்கா ஆகிய
மாகாணங்களின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில்
ஐஎஸ்.ஐஎஸ் போராளிகள்
வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment