மனித உரிமை
மீறல் புகார்:
விசாரணைக்கு
அனுமதி வழங்க இலங்கையிடம்
ஐ.நா. குழு
மீண்டும் வலியுறுத்தல்
இலங்கையில்
நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள்
குறித்து விசாரிக்க
ஐ.நா.
சபையால் நியமிக்கப்பட்ட
3 நபர் குழுவுக்கு
இலங்கை அனுமதி மறுத்துள்ள நிலையில், இக்குழு அனுமதி
கோரி இலங்கையிடம்
மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில்
2009ஆம் ஆண்டு
விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிகட்டப்
போரின்போது மனித உரிமை மீறப்பட்டதாக புகார்
எழுந்தது. இது
குறித்து சுதந்திரமான
சர்வதேச விசாரணையை
மேற்கொள்ள ஐ.நா. மனித
உரிமை ஆணையத்தால்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மனித உரிமை மீறல் விசாரணையை
மேற்கொள்ள 3 நபர் குழுவை மனித உரிமை
உயர் ஆணையர்
அலுவலகம் அமைத்தது.
இந்நிலையில்
இலங்கையின் இறையாண்மைக்கும், கெளரவத்துக்கும்
களங்கம் விளைவிக்கும்
வகையில் ஐ.நா.வின்
மனித உரிமைகள்
அமைப்பு விசாரணை
நடத்த முற்படுவதாகக்
கூறி, 3 நபர்
குழுவின் விசாரணைக்கு
இலங்கை ஜூன் மாதம் அனுமதி மறுத்தது.
இதையடுத்து
ஓஹெச்சிஹெச்ஆர் அலுவலகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள
செய்தியில், "சர்வதேச நாடுகளின்
ஒப்புதலையடுத்து ஐ.நா.வால் கொண்டுவரப்பட்ட
தீர்மானத்தின்படி, மனித உரிமை
மீறல் குறித்த
சுதந்திரமான சர்வதேச விசாரணை மேற்கொள்ள அனுமதி
வழங்க இலங்கையிடம்
தொடர்ந்து அனுமதி
கோரப்பட்டு வருகிறது.
இலங்கை
அரசு அதிகாரிகள்
மற்றும் பொதுமக்களை
சந்திக்கவும், மனித உரிமை மீறல் தொடர்பான
அனைத்து ஆவணங்களையும்
ஐ.நா.
குழு பரிசீலிக்க
அனுமதி அளிக்கவும்
ஐ.நா.
மனித உரிமை
உயர் ஆணையர்
இலங்கை அரசிடம்
தொடர்ந்து வலியுறுத்தி
வருகிறார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள
3 நபர் குழுவில்,
முன்னாள் பின்லாந்து
அதிபர் மார்ட்டி
ஆட்டிசாரி, முன்னாள் நியூஸிலாந்து உயர் நீதிமன்ற
நீதிபதி சில்வியா
கார்ட்ரைட், முன்னாள் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற
வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜஹாங்கீர் ஆகியோர்
இடம் பெற்றுள்ளனர்.
0 comments:
Post a Comment