ரயிலுக்கும்
நடைமேடைக்கும் இடையில் சிக்கி கொண்ட
இளைஞரின் கால்
சக பயணிகளின் உதவியால் தப்பியது
மேற்கு
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரின் வடமேற்கு பகுதியில்
உள்ளது ஸ்ட்ரிலிங்
ரெயில் நிலையம்.இன்று காலை 8.50 மணி
அளவில் மிகவும்
நெரிசலான நேரத்தில்
வழக்கமாக வரும்
ரயில் ஒன்று
வந்து நின்றது
அனைவரும் கதவி
திறக்கபட்டதும் ஏறி இறங்கினர் . அப்போது வாசல்
படியில் நின்று
கொண்டு இருந்த
இளைஞரின் ஒரு
கால் எதிர்பாரத
விதமாக ரயிலுக்கும் ரயில்வே
நடைமேடைக்கும் இடையில் உள்ள பகுதியில் சிக்கி
கொண்டது. உடனடியாக
சக பயணிகள்
ரயில் டிரவைருக்க்கு
தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து
டிரைவர் ரயிலை
இயக்கமால் நிறுத்தி
வைத்தார்.
கால்
சிக்கி கொண்ட
இளைஞர் காலை
எடுப்பதற்கு முயற்சி செய்தார் எடுக்க முடியவில்லை அவருக்கு
சக பயணிகளும்
உதவி செய்தனர்.
இருந்தாலும் அவரால் காலை எடுக்க முடியவில்லை.
கால் முட்டிவரை
உள்ளே சென்று
விட்டது.அவர்
ரயில் படியிலேயே அமர்ந்து இருந்தார்.
உடனடியாக ரயில்
பயணம் செய்த
அனைவரும் இறங்கி
10 ஆயிரம் டன்
எடை உள்ள
ரயிலை ஒருபுறமாக
சிறிது சாய்த்தனர்.
இதை தொடர்ந்து
இளைஞரது கால்
அந்த பகுதியில்
இருந்து விடுபட்டது.அவரது காலில்
சிறிது காயம்
ஏற்பட்டு இருந்தது.
இது
குறித்து ரயில்வே
செய்தி தொடர்பாளர்
டேவிட் ஹெய்ன்ஸ்
கூறும் போது
மிகவும் பிசியான
நேரத்தில் அந்த
மனிதனின் கால்
மாட்டி கொண்டது.அவர் வாசல்
படியில் நின்று
கொண்டிருந்ததால் அவரது கால் வழுக்கி இடைவெளிக்குள்
மாட்டி கொண்டது.
சாரதிக்கு இது
குறித்து தகவல்
தெரிவித்ததால் ரயில் இயக்ககபடவில்லை.உடனடியாக எங்கள்து ஊழியர்களும்
-பயணிளும் இணைந்து
அவரின் கால்களை
மீட்டு ஆம்புலன்ஸ்
மூலம் அவரை
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளோம். என்று
கூறினார்.
0 comments:
Post a Comment