காஸாவில் பலியான குழந்தைகளின் உடல்கள்
‘ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில்’ வைக்கப்படும் அவலம்!
காஸா முனையில் உள்ள ஐ.நா. பாடசாலைமீது இஸ்ரேல் குண்டு வீசியதில் பலியான குழந்தைகளின் உடல்கள் ‘ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில்’ வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியேவர முடியாத வண்ணம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் பலியானவர்களை அடக்கம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே இஸ்ரேல் தாக்குதலில் இறந்த குழந்தைகளின் உடல்கள் ‘ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில்’ வைத்து பாதுகாக்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது
இஸ்ரேல் – காஸாமுனை இடையே கடந்த மாதம் 8 ஆம் திகதி தொடங்கிய சண்டை உக்கிரம் அடைந்து வருகிறது. 2 தினங்களுக்கு முன் 3 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும், அது பலன் அளிக்கவில்லை. இரு தரப்பினரும் அதை மீறி தாக்குதலை தொடர்ந்தனர். இந்த சண்டையில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலியாவது தொடர்கதையாகி வருவது சர்வதேச சமுகத்தை உலுக்கி உள்ளது. இந்த நிலையில், காஸாமுனையின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ரபா நகரில் ஐ.நா. சபை நடத்தி வருகிற பள்ளிக்கூடத்தின்மீது இஸ்ரேல் நேற்று குண்டு வீச்சு நடத்தியது. இந்த தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இங்குதான் போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு ஐ.நா. அடைக்கலம் கொடுத்து வந்தது. இந்த தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் மொத்தம் 30 பாலஸ்தீனர்கள் பலியாயினர். இதன்மூலம் 27 நாள் போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1820ஐ தாண்டியது. இறந்தவர்களில் 398 பேர் ஏதுமறியாத குழந்தைகள், 209 பேர் பெண்கள், 74 பேர் மூத்த குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காஸா முனையில் உள்ள ஐ.நா. பாடசாலைமீது இஸ்ரேல் குண்டு வீசியதில் பலியான குழந்தைகளின் உடல்கள் ‘ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில்’ வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியேவர முடியாத வண்ணம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் பலியானவர்களை அடக்கம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சடலங்கள் அழுகிப் போகாமல் பாதுகாக்க வழியின்றி தவிக்கும் பொதுமக்கள், தாக்குதலில் பலியான பிஞ்சு குழந்தைகளின் பிரேதங்களை ‘ஐஸ்கிரீம் ஃப்ரீஸர்’களில் வைத்து பாதுக்கும் அவலக் காட்சி நிறைந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை காஸாவில் உள்ள மருத்துவ அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment