காஸாவில் போர் நிறுத்தம்  அறிவிக்கப்பட்ட பின்பும்
இஸ்ரேல் முனாபிக்தனமாக கடும் தாக்குதல்
தி இஸ்லாமிக் ஜிஹாத் குழுவின் முக்கிய கமாண்டர் கொல்லப்பட்டார்.

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில், ஹமாஸ் போராளிகளுக்கு மிகவும் நெருக்கமான தி இஸ்லாமிக் ஜிஹாத் குழுவின் முக்கிய கமாண்டர் டானியல் மன்சூர் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதல், இஸ்ரேல் அறிவித்த 7 மணி நேர போர் நிறுத்தத்தின் இடையே சற்றும் எதிர்பாராதவிதமாக நடத்தப்பட்டது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,820 க்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் கடந்த நான்கு வார காலமாக, பாலஸ்தீன மக்கள் தங்களது உடைமைகள் அனைத்தையும் இழந்து உள்நாட்டிலேயே பல்வேறு பகுதிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், 7 மணி நேர மனித நேய அடிப்படையிலான தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் எனவும், தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகரின் அருகே உள்ள அபஸன் அல் கபிரா, அபஸன் அல் சகிரா கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த இடைப்பட்ட நேரத்தில் தங்களின் வீடுகளுக்கு திரும்பலாம் எனவும் இஸ்ரேல் அறிவித்தது.
இதற்கிடையே, ஹமாஸ் இயக்கத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய தி இஸ்லாமிக் ஜிஹாத் என்ற போராட்டக் குழுவின் கமாண்டர் டானியல் மன்சூர் என்பவர் வீட்டின் மீது இன்று காலை இஸ்ரேல் படைகள் ஏவுகணையை வீசி நடத்திய தாக்குதலில், அவர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment

மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top